மலையகத்தில் பல்வேறு அபிவிருத்திகளையும் தொழில் வாய்ப்பினையும் ஒரே நேரத்தில் பெற்றுக்கொடுத்தது மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் அதே போன்று கௌரவ ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ தான் இந்த நாட்டின் 10 வருடத்திற்கு ஜனாதிபதி அந்த அரசாங்கத்தின் ஒரே பங்காளி கட்சி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதனூடாக மலையகத்தின் பாரிய தொழில் வாய்ப்புக்களையும் அபிவிருத்திகளையும் மேற்கொள்ள முடியுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் நிதிச்செயலாளரும் பொது பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்pல் மற்றும் பொது பெரமுனவில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டம் ஒன்று இன்று (26) திகதி ஹட்டன் டி.கே.டப்ளியு கலாசார மண்டபத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்;ந்து கருத்து தெரிவிக்கையில்.இன்று சில மலையக அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள.; தமிழ் பேசும் போது ஜனாதிபதி வந்தால் வெள்ளை வேன் வரும்.என கூறுகிறார்கள் ஆனால் சிங்களத்தில் பேசும் போது வேறு ஒன்றை பேசுகிறார்கள் அவ்வாறான தலைவர்கள் தான் இன்று மலையகத்தில் இருக்கிறார்கள்.
அதே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எந்த தேர்தலில் போட்டியிட்டாலும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பெசில் ராஜபக்ஸ உள்ளிட்டவர்கள் வந்து ஆதரவளிப்பது மட்டு அல்லாது ஆசிர்வாதத்தினையும் செலுத்தி சென்றுள்ளனர.; இன்றும் அவ்வாறே தான் ஜனாதிபதி அவர்களும் பிரதர் அவர்களுக்கு எமக்கு பெரும் சக்தியாக உள்ளனர். என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் பொதுச்செயலாளரும் வேட்பாளருமான ஜீவன் தொண்டமான் ,கணபதிகணகராஜ்.பேராசியர் ஜி.எல் பீரிஸ் உட்பட இ.தொ.கா வின் முக்கியஸத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.