திருகோணமலை மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக வலய உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் வாக்கெண்ணும் பணிகளுக்கான உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பயிற்சி


எப்.முபாரக்-
டைபெறவுள்ள பொதுத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக வலய உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் வாக்கெண்ணும் பணிகளுக்கான உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று(29) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தலைமையில் நடைபெற்றது.

பொறுப்புவாய்ந்த கடமையான தேர்தல் கடமையை கடந்த காலங்களில் செவ்வனே செய்தது போன்று இம்முறையும் செவ்வனே நிறைவேற்றுமாறும் கொவிட் 19 தொடர்பான வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கேற்ப சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இத்தேர்தல் கடமைகளை நிறைவேற்றுவதனை ஆவண செய்யுமாறு இதன்போது மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் வேண்டிக்கொண்டார்.
அரசாங்க சேவை உத்தியோகத்தர்களின் நம்பிக்கையை மேலும் கட்டியெழுப்பும் வகையில் நாம் அனைவரும் செயற்படல் வேண்டும்.மக்கள் அச்சமின்றி வற்புறுத்தலின்றி வாக்களிப்பதற்கான் சூழலை நாம் ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும்.வழங்கப்பட்ட கடமைகள் மற்றும் பொறுப்புக்களை அர்ப்பணிப்புடன் செய்யவேண்டும் என்றும் இதன்போது தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்தார்.
இப்பயிற்சி தொடர்பான மேலதிக விளக்கங்கள் கிழக்கு மாகாண பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எஸ்.சுதாகரனினால் வழங்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -