கண்டி மண்ணில் புதிய சரித்திரம் ஒன்றைப் படைக்க மக்கள் அணி திரள வேண்டும்- வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ் அழைப்பு விடுப்பு


ஐ.ஏ. காதிர் கான்-
ண்டி மாவட்ட மக்களின் அறுதிப் பெரும்பான்மை ஆதரவுடன் மகத்தான வெற்றி ஒன்றை ஈட்டி, இந்த மத்திய மலை நாட்டு மண்ணில் புதிய சரித்திரம் ஒன்றை இம்முறை படைப்பதற்கு, கண்டி மக்கள் அணி திரள வேண்டும் என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ் தெரிவித்தார்.
அக்குரணையில் பல பிரதேசங்களில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும் பொழுதே, அவர் இந்த அழைப்பை விடுத்தார்.
அவர் அங்கு மேலும் பேசுகையில்,
மத்திய மாகாண கண்டி மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வரலாற்றில் முதன்முறையாக ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளராகப் போட்டியிடும் வாய்ப்பு எனக்கு இம்முறை கிடைத்துள்ளது. பொதுஜன பெரமுன சார்பில் கண்டி மாவட்டத்திலிருந்து பாராளுமன்றம் செல்லும் முதல் முஸ்லிம் உறுப்பினர் எனும் மகுடத்தை, நான் பெறுவதற்குக் காரணமாக இருக்கும் கண்டி மாவட்ட மக்களாகிய நீங்கள் பெறப்போகும் அதிஷ்டமாக நான் எனது இந்த வெற்றியைக் கருதுகின்றேன். எனவே, அந்த நம்பிக்கை வீண் போகாதவாறு நீங்கள் அனைவரும் என்னுடன் கைகோர்க்க வருமாறு அழைப்பு விடுக்கின்றேன். நான் கண்டி மாவட்ட மக்களுக்கு பாராளுமன்றம் செல்ல முன்பும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு இருக்கின்றேன். என்பதனையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். இதற்கு மக்களாகிய நீங்களே சாட்சிகளாக இருக்கின்றீர்கள்.
பேசமுடியாத ஊமைகளாக இவ்வளவு காலமாக முடங்கிக் கிடந்த முஸ்லிம் கட்சித் தலைமைத்துவங்கள் தேர்தல் நெருங்கியவுடன் உரிமைக் கோஷங்களை எழுப்பிக்கொண்டு எமக்கு சுதந்திரம் வாங்கித் தருவதாக உங்களைத் தேடி வருவார்கள். அவர்களிடம் இவ்வளவு காலமாக முஸ்லிம்களுக்காக என்ன சாதித்துக் காட்டினீர்கள் என்று தைரியமாகக் கேளுங்கள். இவ்வாறான ஏமாற்றுக் காரர்களின் பசப்பு வார்த்தைகளுக்கு மயங்க வேண்டாம். மிக நிதானமாகச் சிந்தித்து உங்களுடைய வாக்குகளை எங்களுக்கு அளியுங்கள். இதன் மூலம், கண்டி மாவட்ட மக்களின் குறிப்பாக, உடுநுவர தொகுதி வாழ் முஸ்லிம்கள் உள்ளிட்ட சகல சமூக மக்களுக்கும் தேவையான அனைத்து சமய பொது அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துச் செல்வேன் எனவும் உறுதியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இன்று நமக்கு ஒரு சிறந்த ஆளுமை மிக்க செயற்திறன் கொண்ட ஜனாதிபதி ஒருவரை மக்கள் தெரிவு செய்துள்ளனர். அவருடைய கரங்களை மேலும் வலுப்படுத்தி, அவரது வேலைத்திட்டங்களைத் தொடராக முன்னெடுத்துச் செல்லவும், எமது மண்ணையும் மக்களையும் வளப்படுத்தவும் நாம் அவருடன் ஒன்றுபடுவோம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -