நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் மேலாக இருந்து சட்டத்தை கையாண்டு அரசியல் அழுத்தங்களைப் பிரயோகித்த முக்கிய 05 நபர்கள் குறித்த தகவல்கள் அடுத்தவாரத்தில் அம்பலமாகவுள்ளன.
முன்னாள் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச, அடுத்தவாரத்தில் அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர்,
நல்லாட்சியின் காலத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவில் இருந்த ரவி கருணாநாயக்க, மங்கள சமரவீர, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன, அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் இவ்வாறு சட்டத்தை துஸ்பிரயோகம் செய்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
இவர்கள் ஆட்சிக்காலத்தில் செய்த அரசியல் அழுத்தங்கள், சட்டவிரோத தீர்மானங்கள் குறித்து அடுத்தவாரம் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன்பாக பல தகவல்களை அம்பலப்படுத்துவதாகவும் முன்னாள் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச குறிப்பிடுகின்றார்.