குறித்த கலந்துரையாடலில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும் வேட்பாளருமான எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களும் , கட்சியின் தவிசாளரும் முழக்கம் ஏ.எல். அப்துல் மஜீத் அவர்களும் ,முன்னாள் மாகான சபை உறுப்பினரும் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் அவர்களும் கட்சியின் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களும் கட்சியின் சாய்ந்தமருது அமைப்பாளர் அவர்களும் ஏனைய முக்கியஸ்தர்களும் போராளிகளும் கலந்து தங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த தேர்தலில் சிறுபான்மையினரின் பாராளமன்ற பிரதிநிதித்துவத்தை தக்கவைக்கவேண்டியத்தின் அவசியத்தை குறிப்பாக முஸ்லிம்கள், முஸ்லிம் காங்கிரஸின் கீழ் ஒன்றுபடவேண்டியதன் அவசியம் குறித்தும் விசேடமாக சாய்ந்தமருதில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது, எவ்வாறு ஒருங்கிணைந்து செயற்படுவது என்பது சம்பந்தமான ஆலோசனைகளும் இங்கு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.