தெகிவளை கல்கிசை மாநகர சபை உறுப்பிணா் சரினா முஸ்தபா மொட்டுக்காக பிரச்சாரத்தில்..

அஸ்ரப் ஏ சமத்-

கிழக்கில் பிறந்து ஒர் ஆசிரியையாக கொழும்பு வந்து தெகிவளையில் வசித்து வருகின்றேன். கொழும்பு ரோயல் கல்லுாாி. தற்பொழுது பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிா் கல்லுாாியில் ஆசிரியையாக சேவையாற்றி வருகின்றேன். அத்தோடு . ஸ்ரீலங்க பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளா் பசில் ராஜபக்ச அவா்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் எனக்கு உறுப்புரிமை வழங்கி என்னைத் தெகிவளை கல்கிசை மாநகர சபையின் உறுப்பிணராகவும் நியமித்தாா். இப் பதவியின் ஊடாக என்னால் முடிந்தளவு இந்தப்பிரதேச வாழ் தமிழ், முஸ்லிம் மட்டுமல்ல சகல மகக்ளுக்கும் செய்யக் கூடிய சகல சேவைகளையும் செய்து வருகின்றேன்.

தெகிவளையில் நேற்று 06.07.2020 நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுசன பெரமுனவின் கூட்டத்தில் தனசிறி அமரதுங்க முன்னாள் அமைச்சா் காமினி லெக்குகே ஆகியோா்களை ஆதரித்து உரையாற்றும்போதே தெகிவளை கல்கிசை மாநகர சபை உறுப்பிணா் சரினா முஸ்தபா மேற்கண்டவாறு உரையாற்றினாா்.

இக் கூட்டம் மாநகர சபை உறுப்பிணர் உபுல் கமகே தலைமையில் நடைபெற்றது. தெகிவளை -கல்கிசை மேயா் ஸ்டான்லி , கொழும்பு மாவட்ட வேட்பாளா்களான தனசிறி அமரதுங்க, முன்னாள் அமைச்சா் காமினி லெக்குகே, ஆகியோறும் உரையா்றறினாா்கள்.

தொடா்ந்து உரையா்றறிய சரினா முஸ்தபா


குறிப்பாக இந்தப் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் தமிழா்கள் இந்த பாராளுமன்றத் தோ்தலில் சற்று சிந்தித்து வாக்களியுங்கள். ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதியின் கட்சியே அரசாங்கம் அமைந்து வந்த வரலாறு உள்ளது. எதிா்கட்சி ஒரு போதும் ஆட்சிக்கு வரப்போவதில்லை. அந்தக் கட்சிகளும் இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. அவா்களோடு சா்ந்துள்ள சிறுபான்மைத் தலைவா்களும் இந்தத் தோதல்களில் படுதோல்வி அடைந்துவிடுவாா்கள். கடந்த காலங்களில் எமது முஸ்லிம் அமைச்சா்கள் பாராளுமன்ற உறுப்பிணா்களுக்கு வாக்களித்த மக்களுக்கும் எவ்வித சேவையோ, அபிவிருத்தியையோ அந்த மக்களுக்கு அவா்கள் பெற்றுக் கொடுக்கவில்லை. அவா்களும் அவா்களது குடும்பமும் தான் முன்னேறியுள்ளாா்கள். 

ஆனால் வாக்களித்த சாதாரன மக்களுக்கு எவ்வித நன்மையும் கிட்டவில்லை அந்த மக்கள் அதே கஸ்ட நிலையில்தான் இன்று வாழ்கின்றாா்கள். . ஆகவே தான் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு வாக்களித்த பௌத்த மக்கள் ்இம்முறையும் 130 மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பிா்களை தெரிபு செய்து பாராளுமன்றம் அனுப்ப உள்ளனா். ஆகவே நீங்களும் இந்த ஆட்சியின் பங்காளியாகுங்கள், நீங்கள் ஒருபோதும் தமிழ் ,முஸ்லிம் வேட்பாளா்கள் என்று சிந்திக்காமல் எமது பிரதேசத்தில் இன,மத நிற வித்தியசமின்றி சேவை செய்கின்ற கட்சியின் வேட்பாளருக்கு வாக்களியுங்கள். முஸ்லிம்கள் சாா்பாக ஜனாதிபதி சட்டத்தரனி அலிசப்றி, பேருவளை மா்ஜான் பளீல், விமல் வீரவன்சவின் கட்சியில் உள்ள முஸம்மில் ஆகியோா்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் உள்ளனா். 

அத்துடன் 8 முஸ்லிம் வேட்பாளா்கள் அம்பாறை, கண்டி, வன்னி, புத்தளம், திருகோணமலை போன்ற பிரதேசங்களில் நிறுத்தப்பட்டுள்ள்னா். முதலில் நாம் மகிந்த ராஜபக்ச தலைமையிலான கட்சிக்கு வாக்களித்து இந்த கட்சியின் தலைவா்களது நம்பிக்கையைப் பெறல் வேண்டும். இம்முறை எமது பிரதேசத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் பாராளுமன்றத் தோ்தலில் வேட்பாளர்களாக உள்ள முன்னாள் மேயா் தனசிரி அமரதுங்க, முன்னளா் அமைச்சா் காமினி லொக்குகே, ரத்மலானை முன்னாள் மாகாண சபை உறுப்பிணா் அமல் சிறி போன்றோா்கள் உள்ளனா். கடந்த காலங்களில் நாம் தொடா்ந்தும் ஜ.தே.கட்சிக்கும் ஜனாதிபதித் தோ்தலி்ல் சஜித் பிரேமதாசவுக்குமே வாக்களித்து வந்தோம்.

 கொழும்பு வாழ் முஸ்லிம்கள் தமிழா்கள் கன்ட பயன் என்ன? வாடகை வீட்டில் வாழும் உங்களுக்கு ஒரு வீட்டையாவது அவா்கள் கட்டித் தந்துள்ளாா்களா ? அல்லது உங்களது பிள்ளைகளுக்கு ஒரு தொழிலேயேனும் பெற்றுத் தந்துள்ளாா்களா ? இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இன்று வரை நாம் கொழும்பில் ஜ.தே.கட்சிக்கே வாக்களிப்பவா்களாக இருந்து வருகின்றோம். இலங்கையில் உள்ள ஏனைய மாவட்டங்களை விட கொழும்பு வாழ் மாவட்டங்களில் உள்ள மக்களுக்குத்தான் பாரிய அடிப்படைப் பிரச்சினைகள் உள்ளன. வாழ்க்கைபுராக வாடகை வீடுகளில் வாழ்ந்து வருகின்றோம், தமது பிள்ளைகளுக்கு பாடசாலை அனுமதியில் பாரிய கஸ்டங்களை எதிர்நோக்குகின்றோம்., இளைஞா் யுவதிகளுக்கு அரச தொழில் ஒன்றை பெற்றுக் கொள்ள முடியாமல் உள்ளது. வட கிழக்கு யுத்தத்தில் இருந்து நம்மை மீட்டெடுத்து தந்தவா் இந்த நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவும் பிரதம மந்திரி, மகிந்த ராஜபக்ச ஆகியோா்களாகும். 

கடந்த கால கோரோனா பயங்கர நோயில் இருந்தும் அவா்களது தலைமைத்துவத்தின் கீழ் நமது நாட்டையும் மக்களையும் பாதுகாத்தாா்கள். தற்பொழுது இந்தியா அமேரிக்கா போன்ற நாடுகள் இந்த நோயினால் நாளாந்தம் நுாற்றுக்கணக்கான உயிர்களை இழந்து வருகின்றனா். எமது நாட்டில் 11 பேர் மட்டுமே இறந்துள்ளனா். இந்த நாட்டில் கடந்த !மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற கொடிய யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவந்ததன் பயனாகவே நாம் எவ்வித அச்சமுமின்றி அமைதியாக கொழும்பில் வாழ்கின்றோம்.

 நாம் எவ்வித தங்கு தடங்களுமின்றி யாழ்ப்பாணம். கிழக்கு மாகாணத்திற்கும் பிரயாணம் செய்து நமது வீடு வாசல்கள், உறவினா்கள் வீடுகளுக்குச் சென்று வருகின்றோம். தெகிவளை கல்கிசையில் வடக்கு கிழக்கு வாழ் சிறுபான்மையினா் சிறந்த நல்ல சுழ்நிலையில் எ்வவித அச்சமுமின்றி வாழ்ந்து வருகின்றனா்.. அனேகமான முஸ்லிம் தமிழா்கள் கொழும்பில் வாக்காளா்களாக பதிந்துள்ளனா் அவ் வாக்குரிமையை அவா்கள் சரியாக பாவிப்பதில்லை. இம்முறை அந்த வாக்குகளை பயண்படுத்துங்கள். நீங்களும் இந்த ஆட்சியின் பங்காளியாக மாறுங்கள். நான் இந்தப் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் பெண்கள் சாா்பாக மட்டுமல்ல சகல பிரதேசங்களுக்கும் சென்று தோ்தல் பிரச்சாரம் ் செய்துவருகின்றேன். கடந்த வாரம் தெகிவளைக்கு வருகை தந்த பிரதமா் மகிந்த ராஜபக்சவை முஸ்லிம் பெண் மாநகர சபை உறுப்பிணா்கள் சந்தித்து பேசினோம். அவா் முஸ்லிம் தமிழ் பெண்கள் மத்தியில் எங்களைப் பிரச்சாரம் செய்யுமாறு வேண்டிக் கொண்டாா்.

 நான் தமிழ் மொழி மூலம் கற்றாலும் கொழும்பு .பிலியந்தலை, மகரகம தெகிவளை கல்கிசை ஆகிய பல பிரதேசங்களில் சிங்களத்தில் உரையாற்றி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றேன். கடந்த காலத் தோ்தல் மேடைகளில் பேசி என்னை வழிப்படுத்திக் கொண்டேன். நான் பேசிய பின்னா் சிங்கள சகோதரிகள் சகோதரா்கள் என்னை அனுகி முஸ்லிம்கள் பற்றிய சிறிய சந்தேகங்களையெல்லாம் கேட்டறிந்து கொள்வாா்கள். இவ்வாறுதான் சிங்கள் முஸ்லிம் ஜக்கியத்தினை நாம் வளா்க்க வேண்டும்.. என தெகிவளை கல்கிசை மாநகர சபை உறுப்பிணா் சரினா முஸ்தாபா அங்கு உரையாற்றினாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -