தேசிய காங்கிரஸின் மாபெரும் பொதுக்கூட்டம் ஒலுவிலில் நடைபெற்றது.
தேசிய காங்கிரஸ் ஒலுவில் தேர்தல் செயற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் தேசிய காங்கிரஸ் அம்பாறை மாவட்ட பிரத்தித் தலைவரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளருமான ஏ.எம்.இஸ்மாயில் (அஸீஸ்) தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தேசிய தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் அவர்கள் பிரதம அதிதீயாக கலந்து கொண்டார்.
இதன்போது தேசிய காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்ட குதிரைச் சின்ன 3ம் இலக்க வேட்பாளரும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருமான ஏ.எல்.எம்.சலீம் உட்பட தேசிய காங்கிரஸ் வேட்பாளர்கள், உயர்பீட உறுப்பினர் மற்றும் முக்கியஸ்தர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் உட்பட பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டர்.