நாட்டில் உள்ள முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளை ஏற்படுத்திய கட்சி என்றால் அது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தான் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர்ஜே.எம்.லாஹிர்


எப்.முபாரக்-
நாட்டில் உள்ள முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளை ஏற்படுத்திய கட்சி என்றால் அது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தான் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர்ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார்.
தோப்பூர் பகுதியில் நேற்று(30) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்எம்.எஸ்.தௌபீக்கை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:
சமூகத்தின் விடுதலைக்காகவும்,முஸ்லிம்களின் உரிமைக்காகவும் தற்போதைய கட்சியின் தேசியத் தலைமை ரவூப் ஹக்கீம் அவர்கள் செயற்பட்டு வருகின்றார்கள்.
அத்தோடு இம்முறை நடைபெறவுள்ள பொதுத்தேர்லில் முஸ்லிம் சமூகம் அளிக்கின்ற வாக்குகள் ஜனாசாவை எறிப்பதிலிருந்தும்,பள்ளிவாயல்களை தாக்குவதிலிருந்தும் முஸ்லிம்களின் சொத்துக்களை அபகரிக்கின்ற செயற்பாடுகளுக்கு எதிரான வாக்குகளாக அமைய வேண்டும்.
இந்த பொதுத் தேர்தலின் முஸ்லிம் சமூகம் தங்களது தார்மீக ஒற்றுமையை காட்ட வேண்டீயதோடு,பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் அதிகரிக்கப்படல் வேண்டும் திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம் மக்களின் வாக்குவீதம் அதிகரிக்கப்படுவதோடு சனத்தொகையும் முஸ்லிம் மக்களுடையது அதிகரித்து காணப்படுகின்றது அந்த வகையில் ஐக்கிய மக்கள் சக்தியில் இரண்டு ஆசனங்கள் பெறப்படுவது உறுதியாகவுள்ளது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -