டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்று (17) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை ஜும்ஆப் பள்ளிவாயல் பகுதியில் வைத்து இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் மீது வேகமாக வந்த டிப்பர் மோதியதில் இளைஞன் உயிரிழந்துள்ளான்.
குறித்த விபத்தில் உயிரிழந்த இளைஞன் மாவடிச்சேனை பாடசாலை வீதியைச் சேர்ந்த நாசர் நஜாத் (வயது 20) என்பவராவார்.
உயிரிழந்த இளைஞனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, டிப்பர் சாரதியை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.