ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
பாரளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடிகளுக்கு செல்லும் வாக்காளர்கள், ஹேன்ட் சனிடைரை பயன்படுத்தி 2 முறை கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஒரு வாக்காளர் 15 மில்லி லீற்றர் சனிடைஸரைப் பயன்படுத்துவாரெனவும் , ஒரு வாக்காளர் பயன்படுத்தும் சனிடைஸருக்கு ஒரு ரூபாய் செலவாகும்.
இதனடிப்படையில் பொதுத் தேர்தலில் பயன்படுத்தும் சனிடைஸருக்காக தேர்தல் ஆணைக்குழு ஒரு கோடியே 20 லட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையை செலவிட்டுள்ளது என தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.