நோட்டன் பிரிட்ஜ் எம்.கிருஸ்ணா-
நாவலபிட்டி- தலவாகலை பிரதான வீதியில் மரக்கிளையும் மின்கம்பமும் உடைந்து வீழ்ந்தமையினால் அவ் வீதியியின் போக்குவரத்து இரண்டு மணித்தியாலம் முற்றாக தடைபட்டதுடன் மின் விநியோகமும் தடைப்பட்டுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர் ,
பெய்து வரும் மழை காலநிலையில் 28/07 மதியம் 01 மணியளவில் நாவலபிட்டி ஜயதிலக மைதானத்திற்கு அருகிலேயே மரக்கிளையும் மின்கம்பமும் உடைந்து வீழ்ந்துள்ளது ,
மின்சாரசபை ஊழியர்களும் பொலிஸாரும் வீதி அபிவிருத்தி ஊழியர்களும் சுமார் இரண்டு மணி நேரத்தின் பின்னர் மரைக்கிளையையும் மின் கம்பத்தையும் அகற்றிய பின்னர் 03 மணியளவில் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது,
எனினும், மின் கம்பம் உடைந்துள்ளமையினால் நாவலபிட்டியின் சில பகுதிகளுக்கு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர் ,