கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற வேட்பாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலியுடன் இணைந்து கொண்டார்.
வாழைச்சேனை - செம்மண்ணோடை பகுதியில் (26) ம் திகதி இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் வைத்தே பிரதேச சபை உறுப்பினர் அமீர் அலிக்கு ஆதரவு தெரிவித்து இணைந்து கொண்டார்.
இவர், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக சுயேச்சைக் குழுவில் மீராவோடை மேற்கு வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.