மு.காவில் இணைகிறார் சம்மாந்துறை நௌசாத்?


சர்ஜுன் லாபீர்-
கில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளருமான ஏ.எம்.நௌசாத் விரைவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணையவுள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து அறிய வருகிறது

இது தொடர்பான விசேட சந்திப்பொன்று நேற்று (04) சனிக்கிழமை இரவு கல்முனை மாநகர சபையின் மேயர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.
எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட வேண்டும் என்பது தொடர்பிலான பேச்சுவார்த்தையினை இவர் முன்னெடுத்திருந்தார்.

இதற்கு சாத்தியமான சமிஞ்சையினையினை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வழங்காமையினால் குறித்த கட்சியுடன் இவர் அதிருப்தி அடைந்திருந்தார்.
இந்த நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரான ஹரீஸிற்கும் இவருக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று அண்மையில் சம்மாந்துறையில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் தொடரான சந்திப்பொன்றே இன்றிரவு கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றது. இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், ஏ.எம்.நஸீர், எம்.ஐ.எம்.மன்சூர்,வாசீத்,கட்சியின் தவிசாளர் மஜீட்,பிரதி செயலாளர். மந்சூர் ஏ காதர் கல்முனை மேயர் றகீப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இன்றைய சந்திப்பில் சந்திப்பு வெற்றி பெற்றால், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளருமான ஏ.எம்.நௌசாத், மிக விரைவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -