டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்குச் சென்ற இரு பெண்களிடம் இரண்டு லட்சத்திற்கும் அதிக பெறுமதியான நகை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று (29) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாகத் தெரிய வருவதாவுது.பிசியோ தெரப்பி வைத்தியரைப் போன்று வந்த நபர் ஒருவர் குறித்த பெண்களை பரிசோதனை செய்ய வேண்டும் உங்கள் நகைகளைக் கழற்றி கைப்பையில் வைத்துவிட்டு வாருங்கள்.; என்று சொல்லி அவர்களை அழைத்துச் சென்றுள்ளார். அவரை காணாததால் திரும்பி வந்த போது குறித்த இடத்தில் வைக்கப்பட்ட கைப்பையினை காணவில்லை. என்று பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையின் போது குறித்த நபர் போலி வைத்தியராக நடித்து நகைகளை கொள்ளைவிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நோர்வூட்; பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அதிக சனநடமாற்றம் நிறைந்த இடங்களில் இவ்வாறு மிகவும் சூக்சுமான முறையில் நகைகளை கொள்ளையிட்டுள்ளதனால், பொது மக்கள் மத்தியில் பாரிய அச்சம் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இது குறித்த உடனடியாக உரிய நடவடிக்கைகளைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும். என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
0 comments :
Post a Comment