நடைபெறவுள்ள பொதுத் தேர்தலினை முன்னிட்டு தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற் கொள்வதற்காக சுதந்திரமானதூம் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (CAFFE) அமைப்பினால் திருகோணமலை மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கான செயலமர்வு இடம் பெற்றது.
குறித்த செயலமர்வானது இன்று (27) கிண்ணியா விசன் மண்டபத்தில் கெபே அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் ஆர்.எம்.ராபில் தலைமையில் இடம் பெற்றது. இதில் சமாதானம்,பாதுகாப்பு தொடர்பில் கிண்ணியா பொலிஸ் நிலைய உதவி பொறுப்பதிகாரி எம்.எஸ்.எம்.நிஹார் விளக்கவுரைகளை வழங்கினார்.
தேர்தல் வன் முறை சம்பவங்கள், அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் உட்பட வாக்காளர்களை தெளிவூட்டல் உள்ளிட்ட விடயங்களும் இதன் போது கலந்துரையாடப்பட்டன.
அமைதியான தேர்தலுக்காக எனும் காட்சிப்படுத்தல் பெனரில் கலந்து கொண்டோர்கள் கையொப்பங்களையும் இட்டார்கள்.
தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் நாட்டு அரசியல் நிலவரங்கள் தொடர்பிலான விளக்கவுரைகளை கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மகீன் முன்வைத்தார்.
இதில் கண்காணிப்பு பிரதிநிதிகள் என பலர் பங்கேற்றார்கள்..