இவ்வாறு நாபீர் பௌண்டேசனின் தலைவரும் சமூக சிந்தனையாளருமான பொறியியலாளர் உதுமாங்கண்டு நாபீர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (சஜித் அணி) அதிக இடங்களை கைப்பற்றும் சாத்தியமே காணப்படுகிறது. இதனை இந்த மாவட்ட முஸ்லிம்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் 3 ஆசனங்களைப் பெற முடியும்.
அம்பாறை மாவட்டத்தில் 160,000 சிங்கள மக்கள் கடந்த தேர்தலில் வாக்களித்துள்ளார்கள். இந்த நிலையில் முஸ்லிம்களின் 170,000 வாக்குகள் உள்ளன. (கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில்) இருப்பினும் சிங்கள மக்களின் வாக்குகள் இம்முறை போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சிகள் என்ற அடிப்படை 6 ஆகப் பிரிக்கப்படும். பிரதான சிங்கள தேசியக் கட்சிகள், சுயேட்சைக குழு என இவ்வாறு பிரிக்கப்பட்டே சிங்கள மக்களின் வாக்குகள் அளிக்கப்படும். இதனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அம்பாறை மாவட்டத்தில் 80,000க்கும் குறைவான வாக்குகளையே பெற முடியும்..
இந்த நிலையில் முஸ்லிம்களது வாக்குகளை நோக்கும்போது, அவர்களது 170, 000 வாக்குகளில் தேசிய காங்கிரஸுக்கு 35,000க்கும் உட்பட்ட வாக்குகளும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு 25,000க்கும் உட்பட்ட வாக்குகளுமே கிடைக்கும்.
இவ்வாறானதொரு நிலையில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் இந்த விடயத்தில் அதிக கரிசனை கொண்டு செயற்பட்டால் எம்மால் 4 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். இதுவே எமக்கு இவ்வாறு கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பம். எனவே இதனை புத்திசாதுர்யமாக எமது மாவட்ட மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
எமது மண்ணையும் மாவட்ட த்தையும் பெரும்பான்யை சக்திகளிடமிருந்து காப்பாற்ற வேண்டிய ஒரு கட்டாய நிலையில் நாம் உள்ளோம். இதற்கான ஒரே வழி நாம் அனைவரும் ஒற்றுமைப்பட்டு எமது பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதேயாகும்.
சரியான வியூகம் அமைத்து சமூக உணர்வுடன் செயற்பட்டால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மூவரையும் தேசிய காங்கிரஸ் சார்பில் ஒருவரையும் எமது பிரதிநிதியாக எம்மால் தெரிவு செய்ய முடியும்.
எனவே இந்தச் சந்தர்ப்பத்தை சாதகமாகப் பயன்படுத்தி நாம் செயற்பட வேண்டும்.