வாழ்வில் பல சுமைகளைத் தாங்கியவாறு விரக்தியின் விளிம்பில் தம்பிலுவில் கிராமத்தில் ஓர் ஏழைக்குடும்பம் தவிக்கிறது என்ற தலைப்பில் எமது ஊடகத்தில் வெளிவந்த செய்திக்கு உடனடிப்பலன் கிடைத்துள்ளது.
எமது ஊடகத்தில் வெளிவந்த அச்செய்தியைக் கண்ணுற்ற பிரித்தானியா அன்னை சிவகாமி அறக்கட்டளை நிதியத் ஸ்தாபகர் மகாருபன் உடனடியாக இக்குடும்பத்திற்கு உதவுங்கள் என்று இலங்கை இணைப்பாளர் சோ.வினோஜ்குமாரிடம் கூறினார்.
அதற்கிணங்க அக்குடும்பத்திற்கு வாழ்வாதார உதவிக்காக ஒரு தொகுதி முட்டையிடக்கூடிய நாட்டுக்கோழிக்குஞ்சுகளும் 10ஆம் தரம் பயிலும் சர்மிகா என்ற மாணவிக்கு ஒருதொகை பணமும் வழங்கிவைக்கப்பட்டது.
இணைப்பாளர் இளம்விஞ்ஞானி சோ.வினோஜ்குமார் நேற்று திருக்கோவில் பிரதேசசெயலாளர் த.கஜேந்திரன் பொத்துவில் பிரதேசசெயலர் ஆர்.திரவியராஜ் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா சிரேஸ்டகிராமசேவை உத்தியோகத்தர் கண.இராஜரெத்தினம் ஆகியோருடன் அங்கு சென்று இவற்றை வழங்கிவைத்தார்.
தம்பிலுவில் மேற்கு 2ஆம் பிரிவில் வசிக்கும் குறித்த சிந்தாத்துரை சாந்தா(58) கனகசிங்கம் நிரோசா(51) தம்பதிக்கு இன்னும் சிலர் உதவமுன்வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.