புனித ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்-வை.எல்.எஸ்.ஹமீட்


சுபீட்சமான நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய, சிறுபான்மைகளை, குறிப்பாக முஸ்லிம்களை அரவணைத்துச் செல்லக்கூடிய ஆட்சி நம்நாட்டில் மலர எல்லாம் வல்ல இறைவனைப் இப்புனித தினத்தில் பிரார்த்திப்போம்.
நாம் ஓர் தேர்தலின் ஓரத்தில் நின்றுகொண்டிருக்கின்றோம். தேர்தலில் வாக்களிப்பது என்பது “சாட்சி பகர்தல்” என்கின்றனர் உலமாக்கள்.
முஸ்லிம் சமூகம் ஓர் இக்கட்டான காலகட்டத்தில் இத்தேர்தலை முகம்கொடுக்கின்றது. எனவே, இக்காலகட்டத்தில் உங்களை பாராளுமன்றத்தில் பிரதிநித்துவப்படுத்த பொருத்தமானவர் யார்? என்பதற்கு நாம் தேர்தலில் சாட்சி பகரப்போகிறோம்.

அந்தப் பொருத்தமானவர்களுள் ஒருவராக வை எல் எஸ் ஹமீட்டை நீங்கள் கண்டால், உங்கள் மனச்சாட்சி சொன்னால் அதற்காக தேர்தல்மூலம் சாட்சி பகரவேண்டியது நம் பொறுப்பாகும்.

எனவே, அவ்வாறு உங்கள் மனச்சாட்சி சொன்னால் அதற்கான சாட்சியத்தை அல்லாஹ்வை முன்னிறுத்தி எனது சின்னமான மயிலுக்கும் எனது இலக்கமான 8 இற்கும் வாக்களிப்பதன்மூலம் பகருமாறு உங்களை சகோதர வாஞ்சையுடன் வேண்டுகின்றேன்.

இவ்வண்ணம்
இந்த இக்கட்டான காலகட்டத்தில்
உங்களுக்காக நேர்மையாக உழைக்கும் உணர்வுடன்
உங்கள் அன்பு சகோதரன்
வை எல் எஸ் ஹமீட்

வல்ல இறைவன் நம் பாவங்களை மன்னிப்பானாக.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :