எனது அரசியல் முன்னெடுப்பில் காழ்ப்புணர்ச்சி கொண்ட சில நயவஞ்சகர்கள், என்னோடு அன்னியோன்யமாக இருக்கும் சாய்ந்தமருது மக்களுக்கும் எனக்கும் இடையே பகைமையை ஏற்படுத்தி அவர்களது சுயநலன்களை அடைய முற்படுவதாகவும் அவர்களது எண்ணம் ஒருக்காலமும் நிறைவேறப்போவதில்லை என்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிராத்தித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் திகாமடுல்ல மாவட்டத்தில் இலக்கம் 9 இல் போட்டியிடும் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களையும் ஏனைய முஸ்லிம் காங்கிரஸ் சார்பான வேட்பாளர்களையும் ஆதரித்து 2020.07.30 ஆம் திகதி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி பொருளாளரும் உயர்பீட உறுப்பினருமான அல் ஹாஜ் ஏ.சி.யஹ்யாகான் அவர்கது தலைமையில் கிளைக்காரியாலய திறப்புவிழாவும் கருத்தரங்கும் இடம்பெற்றது. இதன்போதே இராஜாங்க அமைச்சர் மேட்க்கண்டவாறு தெரிவித்தார்.
முஸ்லிம் சமூகத்தின் மீதும் விசேடமாக முஸ்லிம்களின் தலைநகரான கல்முனையின் மீது அதிக சிரத்தையுடன் செயற்பாடும் என்னை அந்த செயற்பாட்டிலிருந்து அகற்றிவிட்டு கல்முனையை கருணாவுக்கும் ஞானசாராவுக்கும் இவர்கள் தாரைவார்த்துக்கொடுக்க முற்படுகிரார்களா? என கேள்வியெழுப்பினார்.
கல்முனையைக் காவுகொள்ள ஒருபக்கம் கருணாவும் அடுத்தபக்கம் ஞானசாராவும் வரிந்துகட்டிக்கொண்டு செயற்படும் இந்தவேளையில் சிலரின் போலியான வார்த்தைகளுக்கு துணைபோய் கல்முனை பறிபோக யாரும் காரணமாக இருந்து விடவேண்டாம் என வினயமாக கேட்டுக்கொண்டார்.
தான் எப்போது சாய்ந்தமருது மக்களின் வாக்குகள் தேவையில்லை என்று கூறவில்லை என்றும் ஆஸாத் பிளாசாவில் எனக்கு, சித்தீக் மற்றும் ரிசாத் ஷரீப் போன்றோரால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் மற்றும் அழுத்தத்தின் காரணமாக நான், அன்று கூறிய சில கருத்துக்களை முழுமையாக கேட்காமல் ஓரிரு வார்த்தைகளை மட்டும் மக்களுக்கு போட்டுக்காட்டி மக்களை திசைதிருப்ப முனைவதாகவும் தான் சாய்ந்தமருதிலேயே திருமணம் முடித்து வாழ்ந்து வருவதாகவும் தனக்கும் சாய்ந்தமருதுக்குமுள்ள பிணைப்பை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது வேட்பாளர்களான பைசால் காசீம் தவம் உள்ளிட்டவர்களும் கட்சியின் தவிசாளர் அப்துல் மஜீத் மற்றும் மாநகரசபை உறுப்பினர்களான அமீர்,நிசார் போன்றோரும் உரையாற்றினர். இனிய இசை நிகழ்வு பொல்லடி போன்ற கலைநிகழ்வுகளும் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பெண்கள் உள்ளிட்ட அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment