இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வெளியில் இருந்து எவரும் பாடம் கற்றுக்கொடுக்க தேவையில்லை - மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவிப்பு




க.கிஷாந்தன்-

லங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வெளியில் இருந்து எவரும் பாடம் கற்றுக்கொடுக்கதேவையில்லை. எமது தலைவர் ஆறுமுகன் தொண்டமானால் அனைத்து பயிற்சிகளும் எமக்கு வழங்கப்பட்டுள்ளன - என்று இ.தொ.காவின் நிதி செயலாளரும், நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

அட்டனில் 12.07.2020 அன்று இரவு அட்டன் நகர வர்த்தகர்களுடான நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

" நுவரெலியா மாவட்டத்தின் தலைமை வேட்பாளராக தலைவர் ஆறுமுகன் தொண்டமானே நியமிக்கப்பட்டிருந்தார். அவரின் மறைவின் பின்னர், அப்பதவி வேறு யாரிடமோ சென்றுவிடும் என சிலர் கூறினர். அவ்வாறு செல்லவில்லை. தலைமை வேட்பாளர் பதவி ஜீவன் தொண்டமானுக்கே வழங்கப்பட்டது. அவருக்கு அனுபவம் இல்லையென்றால் அப்பதவியை மொட்டு கட்சிக்காரர்கள் வழங்கியிருப்பார்களா?

கடந்த நான்கு வருடங்களாக செல்லும் இடங்களுக்கெல்லாம் ஜீவனை, தலைவர் அழைத்துசென்றார். பயிற்சிகளை வழங்கினார். எனவே, இ.தொ.கா. என்ற பலம்வாய்ந்த அமைப்புக்கு எவரும் பாடம்கற்றுக்கொடுக்கவேண்டியதில்லை. சமுகத்தை வழிநடத்தும் சக்தியும், அனுபவமும் எமக்கு இருக்கின்றது.

காங்கிரஸ் உறுப்பினர்கள் தேர்தல் காலத்தில் மட்டும் வருபவர்கள் அல்லர். மக்களோடு மக்களாக வாழ்பவர்கள். எனவே, பொதுத்தேர்தலில் எமது ஐந்து வேட்பாளர்களையும் வெற்றிபெற வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். இன்று மலையக சமுகம் ஓரணியில் திரண்டுள்ளது. நிச்சயம் இ.தொ.காவை பலப்படுத்துவோம் என உறுதியளித்துள்ளனர். " - என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -