தலவாக்கலை பி.கேதீஸ்-
இன்னும் 10 வருடங்களுக்கு ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ஷ அவர்களின் ஆட்சியே தொடரும் எனவே மலையக மக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வாக்களித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பலப்படுத்துங்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமாகிய பி.சக்திவேல் தெரிவித்தார்.
தலவாக்கலை கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்தில் இன்று 13.7.2020 மாலை இடம்பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இத்தேர்தல் பிரச்சாரம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மொட்டு சின்னத்தில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் குமாரவேல் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றது இதன்போது அதன் வேட்பாளர் அருளானந்தம் பிலிப்குமார் அவர்களும் கலந்துக்கொண்டார்.