திறமையான உத்வேகமுள்ள வீரர்கள் பலரைக் கொண்ட நிந்தவூர் மினா கழகமானது கடந்த பிரதேச சபைத் தேர்தலில் சில மனக் கசப்புக்களினால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு ஆதரவாக செயற்பட்டிருந்தது, எனினும் நிந்தவூருடைய பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் முகமாக எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தொலைபேசிச் சின்னம் இலக்கம் 7 இல் போட்டி இடும் கெளரவ பைசால் காசிம் அவர்களை மேலும் வலுப்படுத்த நமது பாகுபாடற்ற பிரதிநிதியுடன் ஒன்றாக சேர்ந்து நிந்தவூருடையதும் இந்த தேசத்துடையதுமான சொத்தான மக்கள் சேவகனை வெற்றி பெறச் செய்ய அணி திரண்டிருந்தனர்.
குறித்த நிகழ்வில் கழகத்தினுள் மிகத் திறமையான வீரர்களுக்கான கெளரவிப்பும் இடம்பெற்றது. இதன் போது கழகத்தின் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த போராளியுமான கே.எம்.ஷாபீர், ரதேச சபை உறுப்பினர் கே.எம் ஷாபீர் மற்றும் கழக ஆலோசகர் ஏ.ஏ றஹீம் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.