கல்முனையில் நல்லிணக்கத்திற்கான விழிப்புணர்வு பதாகை திறந்து வைப்பு


ஏ.எல்.எம்.ஷினாஸ்-
ம்பாறை மாவட்டத்தில் கல்முனை மாநகரம் தமிழ் - முஸ்லிம், சிங்கள மக்கள் என்று பல்லின சமூகத்தவர்களும் ஒன்றாய் வாழும் மாநகரமாகும்.இங்கு இனங்களுக்கிடையில் ஒற்றுமையையும் சமூக ,கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களை கட்டியெழுப்பும் உன்னத நோக்கத்தோடு மாநகரத்தின் கல்முனை பிரதான நகரில் 'சமாதான விழிப்புணர்வு பதாகை' திறந்து வைக்கும் நிகழ்வு நல்லிணக்கத்திற்கான சமூக மன்றத்தின் அனுசரணையில் உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் (07) மாலை கல்முனை மாநகரத்தில் நடைபெற்றது.
இதில் கல்முனை மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் பிரதம அதிதியாக கலந்துகொண்டு "இணைந்த கரங்கள் தோற்பதில்லை, எதிர்காலத்தை கட்டியெழுப்புவோம், இலங்கையராய் ஒன்றிணைவோம்" எனம் விழிப்புணர்வூட்டும் வசனங்கள் எழுதப்பட்ட பதாகையை திரை நீக்கம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் எம்.சி. அன்சார், பிரதேச சமூக நல்லிணக்க மன்றங்களின் இணைப்பாளர் எஸ்.எல்.அப்துல் அஸீஸ், வேலுப்பிள்ளை தங்கவேல், சமாதானம் மற்றும் சமூகப்பணிக்குமான அமைப்பின் இணைப்பாளர் ரி.ராஜன், ஒருங்கிணைப்பாளர் கே.ரி.ரோகினி உட்பட மாநகர சபையின் நிருவாக அதிகாரிகள், சமூக அமைப்புக்களி; பிரதிநிதிகள் ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -