இலங்கை நடுவர் சங்க குழுவின் நிலை நடுவராக ஹம்மாத் பதவியுயர்வு


எஸ்.எம்.எம்.முர்ஷித்-
ட்டமாவடியை பிறப்பிடமாகவும் கொழும்பில் வசித்து வருபவருமான முஹம்மட் ஹம்மாத் 4ம் நிலை நடுவர் தரத்திலிருந்து 3ம் நிலை நடுவர் தரத்திற்கு பதவியுயர்வை இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் நடுவர் குழுவினரிடமிருந்து பெற்றுள்ளார். இவர் கிழக்கு மாகாணத்தில் தற்போதைய நடுவர்களில் SARA Penal தரம்-3ற்கு பதவியுயர்வு பெற்ற முதலாவது நடுவராவார்.
ஹம்மாத் ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் ஆரம்பக் கல்வியைப் பெற்று அதன் பிற்பாடு கொழும்பில் தனது கிரிக்கட் விளையாட்டை ஆரம்பித்தார். இவர் 2005ம் ஆண்டு இந்தியா சுற்றுப்பயணம் 2009ம் ஆண்டு மலேசியா சுற்றுப் பயணம் மற்றும் கொழும்பின் பிரதான கழகங்கலான Bloomfield சனத் ஜெயசூரியவின் கழகம், Moors Sports Club, BrendoGroppu Academy,  Sri Lanka Bowling Academy போன்றவற்றில் தனது விளையாட்டின் ஊடாக சிறந்த சேவையை ஆற்றியுள்ளார்.
அதன் பிற்பாடு இலங்கை சட்டக்கல்லூரி கிரிக்கட் அணியிலும் 04 வருடமாக Law-Medical Big Match போட்டியிலும் தனது விளையாட்டினூடாக திறமையை வெளிக்காட்டி இலங்கை சட்டக்கல்லூரி கிரிக்கட் அணியின் உப தலைவராகவும் 2014ம் ஆண்டு செயற்பட்டார்.

ஹம்மாத் தனது நடுவருக்கான முதலாவது பரீட்சையினை irapid Propessional Cricket Umpire Association ல் 90 புள்ளியைப் பெற்று அதில் இனைந்தார். அதன் பிற்பாடு நடுவராக கடமையாற்றுவதற்கான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 2012ம் ஆண்டு இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் நடுவருக்கான பரீட்சையில் '86.75' புள்ளியைப் பெற்று இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுசபையின் தரம் - 5ம் நிலை நடுவராக கடமையாற்றினார்.

அதன் பிற்பாடு சில போட்டிகளில் நடுவராக கடமை புரிந்து மீண்டும் இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் 2016ம் ஆண்டுக்கான பதவியுயர்வு பரீட்சையில் தோன்றி '82' புள்ளிகளைப் பெற்று நேர்முகப் பரீட்சையிலும் சிறந்த பெறுபேற்றைப் பெற்று 2016ம் ஆண்டிற்கான 4ம் நிலை நடுவராக பதவியுயர்வை பதிவு செய்தார். இவர் இதுவரை காலமும் 9 வருட நடுவர் அனுபவத்துடன் 750ற்கு மேற்பட்ட உள்ளுர் தேசிய போட்டிகளில் நடுவராக கடமை புரிந்துள்ளதுடன், 2019ம் ஆண்டில் மேலும் பதவியுயர்வுக்கான பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 300ற்கு மேற்பட்ட நடுவர்கள் கலந்து கொண்டு இதில் முதல் 25 நடுவர்களுக்குள் தனது பெயரை புகுத்திக் கொண்டார்.
இப்பரீட்சையில் இவரின் பெறுபேறு '86' புள்ளிகளையும் நேர்காணலில் '92' புள்ளிகளையும் பெற்று மும்மொழியிலும் சிறந்த பெறுபேற்றுடன் கிழக்கு மாகாணத்தில் தரம் - 4ம் நிலையிலிருந்து 3ம் நிலை ளுயுசுயு Pநயெட நடுவராக இலங்கை கிரிக்கட் நடுவர் சபையினால் பதவியுயர்வைப் பெற்றுள்ளார். கிழக்கு மாகாணத்தில் ளுயுசுயு Pநயெட பதவியுயர்வைப் பெற்ற முதல் நடுவர் என்றால் மிகையாகாது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -