இலங்கை வரலாற்றிலே இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து ஒரு தமிழ் பிரதிதித்துவம் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படவில்லை. இந்தமுறை அதனை சாத்தியமாக்கும் சூழல் உருவாகியுள்ளது என்பதன் அறிகுறியே இரத்தினபுரி நகர மத்தியில் திறந்துவைக்கப்பட்டுள்ள தேர்தல் காரியாலயமாகும். இந்த தற்காலிக தேர்தல் காரியாலயத்தை நிரந்தர அரசியல் காரியாலயம் ஆக்கும் பொறுப்பு இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்களுக்கு உரியது.
சந்திரகுமாருடன் கைகோர்த்து அதனை சாத்தியமாக்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கன்றேன் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிதிச் செயலாளரும் தேசிய பட்டியல் வேட்பாளருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக இரத்தினபுரி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் சந்திரகுமாரின் தேர்தல் காரியாலயத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வேட்பாளர் சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், இரத்தினபுரி மாநகர சபை உறுப்பினர் பத்திராஜா வாசன்பிள்ளை, இரத்தினபுரி பிரதேச சபை உறுப்பினர் மோகன், பலாஙலகொடை பிரதேச சபை உறுப்பினர் விஜயகுமார், இம்புல்பே பிரதேச சபை உறுப்பினர் அன்டனி பிரகாஷ், நல்லிணக்கத்திற்கான மாவட்ட இணைப்பாளர் பிரசாதி பியசோம ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டதுடன் விசேட அதிதியாக கலந்து கொண்ட முன்னாள் நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஒருகாலத்தில் தேசிய பட்டியல் உறுப்பினராக ஏ.எம்.டி. ராஜன் ஊடாக இரத்தினபுரிக்கு ஒரு பாராளுமன்றம் இருந்தது என்பதை நாம் பலரும் மறந்துவிட்டோம். அதேநேரம் அந்த வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டு அடுத்து வரும் தேர்தல்களில் அந்த பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்ளவும் தவறவிட்டோம். ஆண்டுகள் பல கடந்து அதனை சரிசெய்யும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

அந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி கடந்த முறை முப்பதாயிரம் வாக்குகளைப் பெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் குழு உறுப்பினர் சந்திரகுமாரை இந்த முறை அறுபதினாயிரம் வாக்குகளால் வெற்றியடையச் செய்யவேண்டும்.
கடந்த முறை தோல்வி அடைந்துவிட்டோம் சந்திரகுமார் கட்சி யை விட்டு ஓடவில்லை. கூட்டணியை விட்டு விலகவில்லை. மாறாது உறுதியாக ஒரே கட்சியில் நின்று விசுவாசமாக தனது இலக்கில் பயணித்து வருபவர். அந்த கொள்கை நிலைப்பாட்டை வலுப்படுத்தவே நுவரெலிய மாவட்டத்தில் இருந்து வந்து நான் அவருக்காக பிரசாரம் செய்கிறேன்.

உங்களோடு ஒருவனாக தோள் கொடுக்கின்றேன். எனவே இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்கள் கட்சி பேதங்களை மறந்து அந்த இலக்கினை அடைய கைகோர்க்க வேண்டும்.
சந்திரகுமாரின் தேர்தல் செயற்பாடுகளுக்கான இந்த தற்காலிக காரியலயத்தை இரத்தினபுரி நகர மத்தியில் திறந்து வைக்கிறோம் என்பதே நாம் வெற்றி அடையப் போகிறோம் என்பதற்கான அறிகுறியே. இந்த அலுவலகத்தையும் எமது வெற்றியை யும் இரத்தினபுரியில் நிரந்தரமாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.