எச்.எம்.எம்.பர்ஸான்-
மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இருவர் மீது குரங்கு பாய்ந்ததால் இருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று இன்று (14) இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு, ஏறாவூர் பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது கல்குடா பிரதான வீதியில் வைத்து எதிர்பாராத நிலையில் இருவர் மீது குரங்கு பாய்ந்ததால் இருவரும் நிலைகுலைந்து வீழ்ந்து கிடந்துள்ளனர்.
படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.