"கொரோனா வைரஸ் பரவலினால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு உதவும் வகையில், வெளிநாடுகளிலிருந்து அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட நிவாரண நிதிகளுக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும் " என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் செயாரா ஹேரத் வலியுறுத்தினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு அவர் கூறினார்.