உலகில் உள்ள அனைத்து விளையாட்டுகளையும் எமது பிராந்திய இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்தி சர்வதேச சந்தர்ப்பத்தினை வழங்க எண்ணியுள்ளேன் : மொட்டின் வேட்பாளர் ரிஸ்லி முஸ்தபா.


நூருள் ஹுதா உமர்-
கோ
டிக்கணக்கில் உழைக்கும் துறையாக விளையாட்டு துறை காணப்படுகிறது. ஆனால் நமது பிரதேச இளைஞர்களுக்கு அந்த வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. எனது எதிர்கால திட்டத்தில் உலகில் உள்ள அனைத்து விளையாட்டுகளையும் எமது பிராந்திய மக்களுக்கு அறிமுகப்படுத்தி எமது இளைஞர்களுக்கான சர்வதேச சந்தர்ப்பத்தினை வழங்க எண்ணியுள்ளேன். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற தேர்தல் வேட்பாளராக களமிறங்கியுள்ள ரிஸ்லி முஸ்தபா தெரிவித்தார்.

சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் இடம்பெற்ற இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்.

இன்று இளைஞர்கள் எதிர்நோக்கியுள்ள தொழிவாய்ப்பின்மை பிரச்சினைக்கு உரிய வழிகாட்டல் எதுவுமே இல்லை. உரிய முறையில் வழிகாட்டினால் நாம் எல்லோரும் அந்த வாய்ப்பினை பெறலாம். 

அந்த வழிகாட்டல் தொழில் பயிற்சியுடன் கூடிய கல்வி வாய்ப்புகளாக இருத்தல் வேண்டும்.எமது இளைஞர்களுக்கான முறையான வழிகாட்டல் இல்லாமையாலே உலகின் சிறந்த வாய்ப்புகளை தவறவிட்டு இருக்கிறோம். சாதாரண தரம் மற்றும் உயர்தரம் கற்று பல்கலைக்கழக வாய்ப்பை இழந்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறுகிறார்கள். 

அவர்களது எதிர்காலத்தை திட்டமிட்டுக்கொள்ள முடியாத சூழல் காணப்படுகிறது. இது குறித்து எதுவித அக்கறையும் இல்லாமல் எமது அரசியல் தலைவர்கள் தமது காலங்களை வீணாக கழித்து விட்டனர். இவற்றுக்குரிய மாற்று வழியை தேடவேண்டிய காலகட்டத்தில் நாம் அனைவரும் வாழ்கிறோம்.

அதேபோன்றுதான் விளையாட்டு துறை, எமது பிராந்தியத்தில் இதுவரைக்கும் எந்தவொரு முறையான கட்டமைப்புடன் கூடிய மைதானம் இல்லை, அவற்றை பற்றிய சிந்தனையே இல்லாத அரசியல் தலைமைகளுக்குத்தான் நீங்கள் அனைவரும் கடந்த காலங்களில் வாக்களித்தீர்கள், கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்டம் ஆகிய இரண்டு விளையாட்டுகளையும் ஓரளவுக்கு தெரிந்ததை விட வேறு எதுவும் தெரியாது.

இன்று கோடிக்கணக்கில் உழைக்கும் துறையாக விளையாட்டு துறை காணப்படுகிறது. ஆனால் நமது பிள்ளைகளுக்கு அந்த வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. எனது எதிர்கால திட்டத்தில் உலகில் உள்ள அணைத்தது விளையாட்டுகளையும் எமது பிராந்திய மக்களுக்கு அறிமுகப்படுத்தி எமது இளைஞர்களுக்கான சர்வதேச சந்தர்ப்பத்தினை வழங்க எண்ணியுள்ளேன்.

இவை எல்லாவற்றையும் விட எமது இளைஞர்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினை மொழிப்பிரச்சினையாகும். ஆங்கிலத்தில் சரளமாக பேசமுடியாது, சிங்களம் தெரியாது, இது உங்களது குறைபாடு இல்லை, மாறாக அவை குறித்து உங்களுக்கு சரியாக வழிகாட்டப்படவில்லை என்றே நான் கருதுகிறேன்.

அத்துடன் தலைமைத்துவ பயிற்சிகள் இல்லை, இதனால் மாற்று மத தலைமகளை எதிர்கொள்ள முடியாமல் உள்ளது, அவர்களுடன் நேருக்கு நேர் நின்று பேச முடியாது தடுமாற்றம் வருகிறது, எமது உண்மைகளை அடுத்தவருக்கு தெளிவுபடுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளோம்.

இவற்றுக்கெல்லாம் ஒரு முடிவும் முடிவும் வேண்டும் என்பது குறித்து இன்னும் நீங்கள் சிந்திக்காமலா இருக்கிறீர்கள்? புதிதாக சிந்தியுங்கள், இன்றய உலகம் தொழிநுட்ப வளர்ச்சி காரணமாக எங்கோ முன்னேறிக்கொண்டு செல்கிறது. அவற்றை நாமும் அடைய வேண்டும். அதற்கான அத்தனை வழிகாட்டலையும் நான் எதிர்காலத்தில் திட்டமிட்டு உங்களுக்காக வழங்கவுள்ளேன்.

எதிர்வரும் தேர்தலில் நீங்கள் வழங்கவுள்ள அங்கீகாரம், அதன் மூலம் கிடக்கின்ற அதிகாரத்தின் மூலம் நிச்சயம் உங்களுக்கான ஒரு முன்னேற்றகரமான வாழ்க்கையை அனுபவிக்க முடியும் என நான் எதிர்பார்க்கிறேன்.

உங்களை போன்ற ஒரு இளைஞனாக உங்கள் துயரம் அறிந்தவனாக உள்ளேன். என்னோடு கைகோருங்கள், இங்கு ஏறக்குறைய ஆயிரம் இளைஞர்கள் யுவதிகள் இருக்கிறீர்கள், இதனை பத்து மடங்காக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் சகோதரர்களுக்கும், உங்கள் அயலவருக்கும், உங்கள் நண்பர்களுக்கும் இந்த அரிய செய்தியினை கொண்டு செல்லுங்கள், உங்கள் மூலமாக அனைவருக்குமான வழியை தேடுங்கள் என வினயமாக வேண்டுகிறேன். வெற்றியின் பங்காளர்களாக மாறுங்கள், எதிர்காலத்தில் சிறந்த வாய்ப்பினை பெற ஒன்றினைந்து பயணிக்க முன்வாருங்கள் என்றும் அழைப்பு விடுத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -