ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கண்டி மாவட்ட வேட்பாளரும் உடுநுவர தேர்தல் தொகுதியின் அமைப்பாளருமாகிய ஏ.எல்.எம். பாரிஸின் வெற்றியை உறுதி செய்யும் முகமாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை (30) வியாழக்கிழமை உடுநுவர, எலமல்தெனியவுக்கு விஜயம் மேற்கொள்கிறார்.
உடுநுவர, எலமல்தெனிய பியல் வைட் பெலஸ் (PEARL WHITE PALACE) மண்டபத்தில் இடம்பெறும் பொதுக்கூட்ட நிகழ்விலும் பிரதமர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தவுள்ளார். அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு இடம்பெறும் இந்நிகழ்வில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கண்டி மாவட்ட வேட்பாளர்கள், மாகாண சபை, பிரதேச சபை உறுப்பினர்கள், அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.