தனிமைப்படுத்தும் சட்டத்தை மீறி கடவுச்சீட்டை புதுப்பித்துக்கொள்வதற்காக குடிவரவுத் திணைக்களத்திற்குள் சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த இவர் கடந்த 10ஆம் திகதி அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை திரும்பியிருந்த நிலையில் கொஸ்கொட பிரதேசத்திலுள்ள தனிமைப்படுத்தும் முகாமில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் இவர் அங்கிருந்து சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுவதற்காக வெளியேற்றப்பட்ட நிலையில், நேரடியாக குடிவரவுத் திணைக்களத்திற்குள் சென்றுள்ளார்.
இந்த தகவல் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு, மீண்டும் தனிமைப்படுத்தலுக்காக கொஸ்கொட முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றார்.
0 comments :
Post a Comment