கொரோனா தொற்றிலிருந்து மாணவர்கள் பாதுகாப்புப் பெற ஒருதொகை முகக் கவசங்களை மீரா விளையாட்டுக் கழகம் இலவசமாக மீராவோடை அல் ஹிதாய மகா வித்தியாலயத்திற்கு வழங்கியுள்ளது.
ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திக்குட்பட்ட மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபரும் தற்போதைய பிரதி அதிபருமான ஐயூப் முபீன், மீராவோடை மீரா விளையாட்டுக் கழக தலைவர் ஐ.எம்.றிஸ்வினிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய ஒரு தொகை முகக் கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
தமது கோரிக்கையை ஏற்று முகக் கவசங்களை வழங்கி வைத்த விளையாட்டுக் கழகத்திற்கு பாடசாலை நிர்வாகத்தினர் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.