கிழக்கு மக்களின் எதிர்பார்ப்பு சுபீட்சமான முறையில் வாழ வேண்டும் என்பது இதன் மூலம் மக்களின் வாழ்க்கை தரம் உயர வேண்டும். இதற்கான பயணத்தை நாம் மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்


எப்.முபாரக்-
கிழக்கு மக்களின் எதிர்பார்ப்பு சுபீட்சமான முறையில் வாழ வேண்டும் என்பது இதன் மூலம் மக்களின் வாழ்க்கை தரம் உயர வேண்டும். இதற்கான பயணத்தை நாம் மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அதற்கான பலப்படுத்தலே எதிர்வரும் பொதுத்தேர்தல் ஆகும் என திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராகப் போட்டியிடும் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
எம்.ஐ. சவாகிர் தலைமையில் மூதூர் நொக்ஸ் கிராம மக்களைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
அமையப்போகும் அரசில் சிறுபான்மையினராக உள்ள சமூகம் சார்பில் தெரிவு செய்யப்பட வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகை அதிகரிக்க வேண்டும்.
கிராமம் கிராமமாக மக்களின் வாழ்க்கைக்கான அடிப்படைத் தேவைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன.
இப்பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமே ஒழிய ஒருபோதும் பழிவாங்கும் எண்ணமோ புறக்கணிப்போ மக்களுக்கு நடக்கக்கூடாது.
எதை எப்படி செய்யலாம் என்ற தூய தூரநோக்கு எண்ணத்துடன் அரசியலில் செயற்பட வேண்டும். இதனையே மக்கள் எதிர்பார்க்கின்றனர்,நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி இம்மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது மேலும் பொதுஜன பெரமுன கட்சிகனவு கண்டு கொண்டுள்ளது இரண்டு ஆசனங்களை கைப்பற்றுவோம் என்ற நப்பாசையில் இருக்கின்றார்கள்.சிறுபான்மை சமூகம் ஒன்றினைந்து ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்தால் ஒரு ஆசனத்தை கைப்பற்றுவது கூட கஷ்டமாகி விடும் தற்போது ஐக்கிய தேசியக் கட்சி பலமிழந்து விட்டது அதற்கு பதிலாகவே சிறந்த தலைமையுடன் சிறந்த மக்கள் பிரதி நிதிகள் ஒன்றினைந்து போட்டியிடுகின்றார்கள் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -