அட்டன் - பொகவந்தலாவை வீதியில் பஸ் விபத்து : மூவர் வைத்தியசாலையில்


நோட்டன் பிரிட்ஜ் எம்.கிருஸ்ணா-
பொகவந்தலாவில் இருந்து அட்டன் நோக்கி வந்த தனியார் பஸ் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட மூவர் காயங்களுக்குள்ளான நிலையில் கிளங்கன் வைத்தியசாலையி; அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று பிற்பகல் 12.30 மணியளவில் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளங்கன் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவர் தொடர்பில் தெரிய வருவதாவது,
பொகவந்தலாவில் அட்டன் நோக்கி வந்த தனியார் பஸ், இ.போ.ச பஸ் ஒன்றுடன் ஒன்று முந்திக்கொண்டுச் செல்ல முற்பட்ட வேலையில் அதி வேகத்துடன் வந்த தனியார் பஸ் வேகத்தை கட்டுபடுத்த முடியாத நிலையில், வீதீயோரத்தில் உள்ள மண்மேட்டில் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றதாகம் இதன்போது பஸ்ஸில் சுமார் 23 பயணிகள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைப்பெற்று வருவதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், பஸ் வண்டி பெரும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்பப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -