ஈஸ்டர் தாக்குதல் புலஸ்தினி என்கிற சாரா ஜெஸ்மின் உயிருடன் உள்ளாரா? தாயின் வாக்கு மூலம்!

ஜே.எப்.காமிலா பேகம்-

ஸ்டர் தாக்குதல் கும்பலில் இருந்த புலஸ்தினி என்கிற சாரா ஜெஸ்மின் என்பவர் பற்றிய மேலும் பல உண்மைகளை அவரது தாயார் ஜனாதிபதி ஆணைக்குழு முன் வெளியிட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் தாயாராகிய ராசரத்னம் கவிதா, ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக நேற்று (25) ஆஜராகினார்.

இதன்போது சாட்சியம் அளித்த அவர், “2019ம் ஆண்டு ஏப்ரல் 26ம் திகதி சாய்ந்தமருது இல்லமொன்றில் நடந்த வெடிப்புச் சம்பவம் குறித்து வாக்குமூலம் பதிவு செய்ய கடந்த ஜனவரி 10ம் திகதி அம்பாறை பொலிஸார் அழைத்தனர்.

குறித்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ள இல்லத்தில் இருந்து கிடைத்த தங்க நகைகளை பொலிஸார் காண்பித்தனர். ஆனால் அவற்றில் எனது மகளின் நகைகள் இருக்கவில்லை. எனது மகளை ஸஹ்ரான், கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் குண்டு வெடிக்கச்செய்த மொஹமட் ஹஸ்துவுக்கு பலவந்தமாக மதம் மாற்றி திருமணம் செய்து கொடுத்துள்ளார்” என்று சாட்சியம் அளித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -