தமிழ் மக்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு திருப்திபடுத்தாமையே வெளியேறக் காரணம்


ஹஸ்பர் ஏ ஹலீம்-

ட ,கிழக்கு தமிழ் மக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு திருப்திப்படுத்தாமையும் நம்பிக்கையை ஏற்படுத்தாதன் காரணமே கட்சியை விட்டு வெளியேறக் காரணம் எனவும் தேசிய கூட்டணியை உருவாக்க வேண்டியதன் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் போராளியுமான ரூபன் என்று அழைக்கப்படும் ஆத்மலிங்கம் இரவிந்திரா தெரிவித்தார்.
திருகோணமலையில் இன்று (10)இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்
போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துரைக்கையில்

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பலர் வெளியேறியுள்ளார்கள் ஐந்து கட்சிகள் இணைந்து பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியாக களமிறங்கியுள்ளோம் விக்னேஸ்வரன்,சுரேஷ் பிரேமச் சந்திரன், சிவாஜிலிங்கம்,ஸ்ரீகாந்தா போன்றோர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்தவர்களே தமிழ் மக்களையும் குறிப்பாக வட கிழக்கு மக்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தாமையும் வெளியேறியுள்ளார்கள்.

அவர்களுடைய கடந்த கால செயற்பாடுகள் மந்த கதியில் இருந்தது நாங்கள் ஒருமித்து வாக்களித்தால் திருகோணமலையில் செழிப்புமிக்க மாவட்டமாகவும் நாடாளுமன்றம் அனுப்புகின்ற போது எமது மக்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வினையும் அரசியல் அதிகாரங்கள் ஊடாக தீர்க்க முடியும் .
சம்மந்தன் ஐயா கூறுவது போன்று சிறு சிறு குழுக்களாக பிரிந்துள்ளதால் வாக்குகள் சிதறடிக்கப்படுவதாகவும் பயமுறுத்துவதுமான நிலை காணப்படுகிறது .
1994 ல் தங்க துறை சம்மந்தன் போன்றோர்கள் போட்டியிட்ட போது அப்போது சம்மந்தன் ஐயாவை மக்கள் நிராகரித்தார்கள் இதற்காக நல்லதொரு அரசியல் தலைமையை தெரிவு செய்து நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும் கடந்த கால பிண்ணனி அரசியல் நகர்வுகளுடன் தொடர்பு பட்டதால் அரசியல் ஊடாக தமிழ் மக்கள் வழிநடாத்த முடியும்
இதற்காக மக்கள் ஆணையை எனக்கு வழங்குவார்களாயின் திருகோணமலையை சிறப்புமிக்க நகரமாக மாற்றுவோம் இனவிகிதாசாரம் , நிலப்பகுதி அபகரிப்பு என்பன எமது மண்ணில் ஏற்பட்டு வருகிறது இவ்வாறான விடயங்களை நாம் பல திட்டங்கள் ஊடாக மாவட்டத்தையும் மக்களையும் வெற்றி கொள்ள கூடிய தலைவர்களை உருவாக்க வேண்டும் என்றார்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -