தலவாக்கலை பி.கேதீஸ்-
யார் எல்லாம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விட்டு பிரிந்து போனீர்களோ? நீங்கள் அனைவரும் மீண்டும் திரும்பி தாய் வீட்டுக்கு வாருங்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான ஜீவன் குமாரவேல் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தலவாக்கலை கல்கந்தவத்தை தோட்டத்தில் இன்று 13.7.2020 மாலை இடம்பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மொட்டு சின்னத்தில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்களாகிய பி.சக்திவேல்,அருளானந்தம் பிலிப்குமார் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.