முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நாளைய தினம் (27) அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விக்டர் சமரவீரவினால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கு அமையவே, அவர் ஆணைக்குழுவுக் அழைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஊடக சந்திப்பொன்றை நடத்தி தமக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கருத்துக்களை முன்வைத்ததன் ஊடாக, தான் அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டதாக, விக்டர் சமரவீரவினால் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவின் ஊடாக இதுவரை 152 முறைப்பாடுகளின் ஆரம்ப கட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், அவற்றில் 42 முறைப்பாடுகளை விசாரிப்பதற்கு திகதி நிர்ணயிக்கப்படவுள்ளதாகவும், பொதுத் தேர்தலின் பின்னரே அவற்றுக்கான திகதிகள் நிர்ணயிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 21 முறைப்பாடுகள் மீதான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது