நாகரீகமற்ற அரசியலில் அம்பாறை மாவட்ட இளைஞர்கள் ஒழுக்கம் மிக்கவர்கள் என கருணா அம்மான் புகழாரம் சூட்டியுள்ளார்.
அம்பாறை மாவட்டம் திகாமடுல்ல தேர்தல் தொகுதி மத்திய முகாம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மணல்கும்பத்தடி பகுதியில் தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணியின் நேற்று(28) இரவு பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் குறிப்பிட்டதாவது
அம்பாறை மாவட்டத்தில் எனது வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது.அம்பாறை மாவட்ட மக்கள் தேர்தலில் வாக்களிப்பவர்களில் அனுபவம் உள்ளவர்கள்.எனவே வருகின்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாரிய மாற்றத்தை உருவாக்குவோம்.அம்பாறை மாவட்ட இளைஞர்களை பாராட்ட வேண்டும்.உரிமைக்காக தானாகவே வந்து இணைந்து வேலை செய்து கொண்டு இருக்கின்றார்கள்.அவர்கள் இதுவரை எதுவித வேண்டுகோளையும் கோரிக்கைகளையும் சுயநலத்துடன் தெரிவிக்கவில்லை.ஒழுக்கமும் கட்டுப்பாடும் உள்ள இவ்வாறான இளைஞர்கள் தான் எமது சமூகத்திற்கு வேண்டும் என பாராட்டி பேசினார்.
0 comments :
Post a Comment