ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவில் போட்டியிடும் வேட்பாளர் றிஸ்லி முஸ்தபாவை ஆதரித்து சாய்ந்தமருது கடற்கரை வீதியில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் ( 24) உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்
அம்பாறை மாவட்டத்தில் உள்ள கரைவலை மற்றும் ஆழ்கடல் மீனவர்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கி உள்ளனர் இதனை நான் நிவர்த்தி செய்வதற்கும் , சிறந்த சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கவும்
என்றும் தயாராகவே இருக்கின்றேன் இதுதொடர்பாக உரியவர்களுடன் தொடர்புகொண்டு இதற்கான தீர்வுகளை நான் மேற்கொள்வேன்.
எதிர் வரும் காலங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன கட்சியை ஆட்சி அமைக்க போகிறது. எமது பகுதிகளை அபிவிருத்தி செய்ய வேண்டும் ,எமது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். இம் முறை எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை தாருங்கள் இதன் மூலம்நீங்கள் உண்மையான மாற்றத்தை உணர்வீர்கள்
கல்வியின் மூலமே சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும்.எமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி வாய்ப்புகள், இளைஞர் யுவதிகளுக்கு தொழில் ரீதியான கல்வி முறைகள் ஏற்படுத்துதல் ,புதிய தொழில்நுட்ப முறைகளை அறிமுகப்படுத்தல் ,புதிய வகையானவிளையாட்டுக்களை எமது பகுதிகளில் அறிமுகப்படுத்தல்,என்றும் மக்களுக்காக சேவை செய்வதே எனது சிந்தனையாக இருக்கிறது இதனை எமது இம் மாவட்ட மக்களுக்கு செய்வதற்கு காத்திருக்கிறேன் என்றார்.