கல்விசார் ஊழியர்களின் தபால் மூல வாக்குகள் இதுவரை தொன்னூறு சதவீதம் பதிவு

.
ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
மூன்றாவது நாளாக நடைபெற்றுவரும் தபால் மூல வாக்கெடுப்பு இன்று காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகின. இதில் இதுவரை கல்விசார் ஊழியர்கள் சுமார் 90 சதவீதமான வாக்குகள் பதிவு செய்துள்ளதாக வாக்கெடுப்பு நிலையங்களில் கடமைபுரியும் தேர்தல் கடமையதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ள பொது தேர்தலுக்காக மலையக பகுதியில் உள்ள அரச ஊழியர்கள் இன்று (15) மூன்றாவது நாளாக தமது வாக்கினை பதிவு செய்தனர்.
கடந்த 13 ம் திகதி ஆரம்பமான தபால் வாக்கெடுப்பு எதிர்வரும் 17ம் திகதி வரை நடைபெறவுள்ளன.முதல் சுகாதார துறையினரும் இரண்டாம் நாள் கல்வி மற்றும் அரச அலுவலகங்களில் கடமை புரிபவர்களும வாக்களித்து வருகின்றனர்.;
நாளை பாதுகாப்புத் துறையினரும் பொலிஸ் உத்தியோகஸத்தர்கள்,இரானுவம்,சிவல் பாதுகாப்பு உத்தியோகஸத்தர்கள் ஆகியோர் வாக்களிக்க உள்ளனர்.
ஒவ்வொரு வாக்கெடுப்பு நிலையங்களில் சுகாதார பொறிமுறைகளுக்கமைவாக வாக்கெடுப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.
வாக்கெடுப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் விசேட தேர்தல் கண்காணிப்பாளர்களும் வருகை தந்து வாக்கெடுப்புக்களை கண்காணித்து வருகின்றனர்.
இதே வேளை நுவரெலியா மவாட்டத்தில் பாராளுமன்றத்திற்கு எட்டு பேரை தெரிவு செய்வதற்காக இம்முறை 12 அரசியல் கட்சிகளும்,12 சுயேட்சைக் குழுக்களும் களத்தில் குதித்துள்ளனர்.குறித்த தேர்தலில் போட்டியிடுவதற்காக நுவரெலியா மாவட்டத்தில் இம்முறை 264 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -