திருகோணமலை வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி பத்து போதை லேகியங்களை வைத்திருந்த ஒருவரை நேற்று(28) மாலை கைது செய்துள்ளதாக வான்எல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஜயந்திபுர,வான்எல பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் வான்எல பகுதியில் போதைதரக்கூடிய பத்து லேகியங்களை மற்றொருவருக்கு வழங்குவதற்காக வீதியில் நின்ற சமயத்தில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து பத்து போதை லேகியங்களுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு கந்தளாய் நிதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment