நிந்தவூர் அரசியலில் பெரும் திருப்பம்..!

முன்னாள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தீவிர ஆதரவாளரும், கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் அக்கட்சி சார்பாக போட்டியிட்டவரும், வாக்குகளை கணிசமான அளவில் பெற்றவருமான ஆதம்பாவா வாக்கிர் ஹுசைன் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் பொதுக்கூட்டத்தில் இணைந்து கொண்டார்.

பொறியியலாளர், சமூக ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என பன்முக ஆளுமைகளைக் கொண்ட ஆதம்பாவா வாக்கிர் ஹுசைனுடைய ஆதரவாளர்கள் படைசூழ 13.07.2020 அன்று நிந்தவூரில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருடன் கைகோர்த்ததன் மூலம் மிகப்பலம் மிக்க தன்னுடைய வாக்கு வங்கியை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்கள் இத்தேர்தலில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

யாரும் எதிர்பார்க்காத இம் மாற்றமானது நிந்தவூர் அரசியலில் மிகப்பெரும் திருப்புமுனையாக அரசியல் ஆர்வலர்களால் பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்களிடையேயும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -