காணாமல் போனோரின் உறவுகளை சுற்றி வளைத்த புலனாய்வுத்துறை!



யாழ்ப்பணத்தில் நேற்று புதன்கிழமை காணமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மேற்கொண்ட துண்டுப்பிரசுரங்கள் கையளிக்கும் நிகழ்வில் புலனாய்வுப் பிரிவினர் சூழ்ந்து கொண்டு கண்காணிப்பில் ஈடுபட்ட சம்பவத்தினால் அங்கு சிலமணிநேரத்திற்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டிருந்தது.

வவுனியா காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு தூபிக்கு முன்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு ஆதரவு தெரிவித்து துண்டுப்பிரசுரங்கள் வழங்கியிருந்தனர்.

இந்த இடத்திற்கு வந்த ஏராளமான புலனாய்வாளர்கள் துண்டுப்பிரசுரங்கள் வழங்கிய காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை கையடக்க தொலைபேசிகள் ஊடாக ஒளிப்படங்கள் எடுத்து அச்சுறுத்தினார்கள்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான நிலைமை காணப்பட்டதுடன் அவ்விடத்தில் நின்றவர்களின் விபரங்களையும் சேகரித்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :