அர்ஜுன் மகேந்திரன் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவே முழுப்பொறுப்பையும் ஏற்றிருந்தார். அவரின் ஆலோசனை பெற்றே பிணைமுறி விநியோகம் இடம்பெற்றது. மகேந்திரன் வெளிநாடு செல்லவும் ரணில் விக்கிரமசிங்க தான் இடமளித்தார்.
இன்று ரணில் தரப்பும் சஜித் தரப்பும் தனித்தனியாக போட்டியிடுகின்றன. ஆனால் பிணைமுறி மோசடியிலிருந்து அவர்கள் இருதரப்பினராலும் தப்ப முடியாது. தற்போதைய ஜனாதிபதியோ பிரதமரோ அவருக்கு வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல இடமளிக்கவில்லை.
எமது அரசு அரச சேவையை நசுக்குவதாக ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார். சஜித் ஆட்சியில் அவற்றை சரி செய்வதாகவும் அவர் கூறியுள்ளார். 2001-/2004 காலத்தில் தான் அரசு துறையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஓய்வூதியமும் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம். உங்கள் விளம்பரங்களுக்கும் அழையுங்கள் 077 61 444 61 /075 07 07 760 |