கடனை மீள் செழுத்துவது குறித்து இந்தியாவுடன் இலங்கை பேச்சு!

ஜே.எப்.காமிலா பேகம்-

டன்களை மீள் செலுத்துதல் தொடர்பான இருதரப்பு தொழிநுட்ப கலந்துரையாடல் ஒன்று இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கிடையில் நேற்று முன் தினம் இடம்பெற்றுள்ளது

இலங்கைக்கான இந்திய தூதரகம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன்களை மீள செலுத்துவதற்கான கால எல்லையை மீள ஒழுங்கமைப்பது தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது

இந்திய வெளியுறவு அமைச்சு, இந்திய நிதி அமைச்சு மற்றும் EXIM வங்கி ஆகியவற்றின் அதிகாரிகளை உள்ளடக்கிய தூதுக்குழுவினர் இலங்கை நிதி அமைச்சின் வெளியுறவு வளங்கள் தொடர்பான திணைக்கள அதிகாரிகள் குழுவுடன் காணொளி காட்சி மூலம் இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

தற்போது சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள் ஆகியன குறித்து, முன்னதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்திருந்தார்.

இந்த நிலையிலேயே கடன்களை மீள செலுத்துவதற்கான கால எல்லையை மீள ஒழுங்கமைப்பது தொடர்பான குறித்த கலந்துரையாடல் நேற்று முன் தினம் இடம்பெற்றது.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பிலான அடுத்த கட்ட கலந்துரையாடலை விரைவில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -