கல்முனை மாநகர சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள மருதமுனையைச் சேர்ந்த பதுர்தீன் முஹம்மட் ஷிபான், தனது சத்தியப்பிரமாண பத்திரத்தை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம் றகீப் அவர்களிடம் கையளித்து, உறுப்பினர் பதவியை பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (21) மாநகர முதல்வர் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் மாநகர சபையின் நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.ஆரிப் உட்பட புதிய உறுப்பினர் பி.எம்.ஷிபான் அவர்களின் குடும்ப உறவினர்கள், கட்சிப் பிரமுகர்கள் மற்றும் ஆதரவாளர்களும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது புதிய உறுப்பினர் ஷிபான் அவர்களை வரவேற்று, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட மாநகர முதல்வர் றகீப் அவர்கள், தனது உறுப்பினர் பதவி ஊடாக மக்களுக்கு சேவையாற்றுவதற்கு தேவையான ஒத்துழைப்புகள் அவருக்கு முழுமையாக வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
மாநகர சபை உறுப்பினர் ஷிபான் கருத்துத் தெரிவிக்கையில்; இப்பதவி மூலம் மக்களுக்கு முடியுமான சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் மாநகர சபையின் வெற்றிகரமான செயற்பாடுகளுக்காக கட்சி வேறுபாடுகளுக்கப்பால் மாநகர முதல்வருக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவேன் எனவும் தெரிவித்தார்.