ஹட்டன் கே.சுந்தரலிங்கம் -
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் டிக்கோயா பிரதான வீதியில் அலுத்கம பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று (26) இரவு இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் பகுதியிலிருந்து டிக்கோயா பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
தெய்வாதீனமாக சாரதி சிறிய காயங்களுடன் உயிர்த்தப்பியுள்ளார்.
எனினும் முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளன.
குறித்த விபத்து முச்சக்கரவண்டியினை செலுத்திய சாரதிக்கு வேகத்தை கட்டுபடுத்த முடியாமல் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.