முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் இழக்க செய்யும் வேலைகளை பதில் தவிசாளர் நிறுத்த வேண்டும் - உறுப்பினர் எம்.ரீ.எம்.சப்ராஸ்


பாறுக் ஷிஹான்-
முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் இழக்க செய்யும் வேலைகளை பதில் தவிசாளர் நிறுத்த வேண்டும் என உறுப்பினர் எம்.ரீ.எம்.சப்ராஸ் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபையின் 28 மாதாந்த சபை அமர்வு பதில் தவிசாளர் தலைமையில் இன்று(23) இடம்பெற்றது.

இதன்போது பேசிய முஸ்லிம் காங்கிரஸ் சார்பான நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர் எம் ரீ எம். சப்ராஸ் இந்த கூற்றை வலியுறுத்தினார்.
எமது இலங்கையை பொறுத்தளவில் தேர்தல் மாவட்ட ரீதியாகவுள்ள 24 மாவட்டத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகமாக தெரிவு செய்யப்பட்ட மாவட்டமாக அம்பாறை மாவட்டம் விளங்குகின்றது. தற்போதைய கள சூழ்நிலையில் பொதுஜன பெரமுன கட்சிக்கும் , ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கும் இடையில் மிக சொற்ப வாக்கு வித்தியாசமே காணப்படுகின்றது. இந்த காலக்கட்டத்தில் நிந்தவூர் பிரதேத்தை முன்னிறுத்தி மூன்று வேட்பாளர்கள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதால் சிறி லங்கா சுதந்திரக் கட்சி சார்பான பதில் தவிசாளர் எமது பிரதேசத்தில் பொதுஜன பெரமுன காட்சிக்கு வாக்கு சேகரிக்கும் விடையமானது எமது பிரதேசத்தை மையப்படுத்திய வேட்பாளர்களை பலம் இழக்க செய்யும் ஆதலால் இந்த விடையத்தில் முஸ்லிம் பிரதிநித்துவத்தை கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த பதில் தவிசாளர் நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் பிரதேச சபை உறுப்பினராக வந்தவன் . இன்று எமது கட்சியும் பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்துள்ள காரணத்தினால் தான் எனது கட்சிக்கு கட்டுப்பட்டு செயற்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படுள்ளது. இருந்த போதிலும் நான் பொதுஜன பெரமுன கட்சிக்கு வாக்களிக்க யாரையும் நான் வற்புறுத்தவில்லை மக்களுக்கு தெரியும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று.இனறு அம்பாறை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ச வை நிந்தவூர் பிரதேச்த்திற்கு அழைத்து வருவது எனக்கு சிறிய விடயம் எம்மை சிதைக்க நான் முயற்சிக்க மாட்டேன் என தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -