கந்தக்காடு புனர்வாழ்வு முகாம் தொடர்பில், கொரோனா தொற்றுக்குள்ளாகக்கூடிய சகலரையும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட எல்லோரையும் தத்ததமது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுகுற்டுத்தி உள்ளதாகவும், கொரோனா தொற்று அறிகுறிகள் காணப்பட்டவர்கள் சிகிச்சைக்காகக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ராணுவ தளபதி கூறினார்.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலாவது நாட்டிற்குள் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டால், அது சம்பந்தமான நடவடிக்கைககளை உடனடியாக மேற்கொள்ள புலனாய்வு பிரிவினர் 24மணித்தியாலமும் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறினார்.
தற்போதைய சூழ்நிலையில் கந்தக்காடு புனர்வாழ்வு முகாமுடன் தொடர்புபட்ட சகலரும் பூரணமாக அடையாளம் காணப்பட்டு முழுமையான கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதால்,நாட்டை "லொக்டவுன்" பண்ணுவதற்கு அவசியம் இல்லை எனவும் ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.