திருகோணமலை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேற்பாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக இரண்டு ஆசனங்கள் பெறுவதி உறுதி என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கந்தளாயில் நேற்று (23) மாலை கட்சி வேற்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் கூட்டமொன்றின் போதே அவர் இதனைதெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் :
திருகோணமலை மாவட்டத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதிக்கம் மேலோங்கி காணப்படுகின்றது.
இன்று நாட்டில் சில்லறைக் கட்சிகள் வாக்குகளை சூறையாடி வருகின்றது,அதற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கூடுதலான ஆசனங்களை கைப்பற்றுவது உறுதி, அம்பாறையையும் திருகோணமலை மாவட்டத்திலும் பொது ஜன பெரமுன வெற்றியடைந்தால் அவர்களின் ஆதிக்கம் அகங்காரம் கூடிவிடும் அவர்களை அகங்காரம் தொல்பொருள் செயலனி விவகாரங்களில் கண்டு கொண்டுள்ளோம்.
மக்கள் சிந்தித்து முஸ்லிம் சமூகத்திற்கு வாக்கு பலத்தினை அதிகரிக்க வேண்டும்.
இன்று அம்பாறை மாவட்டத்தில் தூர நோக்கு மக்கள் இயக்கம் என்றகின்ற அமைப்பு மாவட்டத்தினை கைப்பற்றுவார்களாம்,அவர்கள் ஆளுகின்ற அரசுக்கு கூலிக்கு மாறடிப்பவர்கள் அவர்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை நான் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.